BooksStoryTamil AudiobooksYoutube

Solaimalai Ilavarasi Audiobook சோலைமலை இளவரசி

சோலைமலை இளவரசி Solaimalai Ilavarasi Full Story Audiobook Mr and Mrs Tamilan

Solaimalai Ilavarasi Audiobook சோலைமலை இளவரசி Solaimalai Ilavarasi Full Story Audiobook Mr and Mrs Tamilan

Solaimalai Ilavarasi Audiobook சோலைமலை இளவரசி Solaimalai Ilavarasi Full Story Audiobook Mr and Mrs Tamilan

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களில் பயணிக்கின்றது. அப்பகுதிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய ஒருவரின் நிகழ்கால வாழ்வையும் மேலும் அவர் தன்னுடைய முற்பிறவி நினைவுகளைப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கதை கதாநாயகனின் சுதந்திர போராட்டத்தையும், அவன் காதலையும் பற்றிக் குறிப்பிடுகின்றது.

Credits -:
Book : சோலைமலை இளவரசி Solaimalai Ilavarasi
Author of book -: கல்கி கிருஷ்ணமூர்த்தி
Copyright © கல்கி கிருஷ்ணமூர்த்தி, All rights reserved.

Popular Tags
solaimalai ilavarasi novel in tamil,solaimalai ilavarasi story,solaimalai ilavarasi book,solaimalai ilavarasi audiobook,solaimalai ilavarasi,solaimalai ilavarasi pdf,solaimalai ilavarasi story in tamil,

mohini theevu,solaimalai ilavarasi read online,solaimalai ilavarasi wiki,solaimalai ilavarasi review,marutha nattu ilavarasi novel,solaimalai ilavarasi audiobook,audiobook,

kalki books,kalki novels in tamil,kalki novels audio,kalki novels,kalki novelist,kalki audiobooks,kalki tamil audio books,kalki story books,kalki books,Kalki Krishnamurthy,

solaimalai ilavarasi story in tamil,kalki tamil audio books,solaimalai ilavarasi wiki,marutha nattu ilavarasi novel,audiobook,kalki audiobooks,solaimalai ilavarasi review,kalki books,kalki novels audio,

kalki novels,Kalki Krishnamurthy,solaimalai ilavarasi,solaimalai ilavarasi read online,kalki story books,solaimalai ilavarasi pdf,solaimalai ilavarasi story,solaimalai ilavarasi novel in tamil,solaimalai ilavarasi audiobook

குமாரலிங்கம் ரயிலிருந்து தப்பிய ஏழாம் நாள், சுமார் 250 மைலுக்கு மேல் கால்நடையாக நடந்து சோலைமலை மணியக்காரர் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். மணியக்காரர் அவனைப் பார்த்ததும் முதலில் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. யாரோ ஊர் சுற்றும் பிச்சைக்காரன் என்று நினைத்தார். “ஐயா! என்னை அடையாளம் தெரியவில்லையா?” என்று கேட்டதும், உற்றுப் பார்த்துத் தெரிந்து கொண்டார். “ஐயோ, குமாரலிங்கமா? இது என்ன கோலம்? அடாடா! இப்படி உருமாறிப் போய் விட்டாயே?” என்று அலறினார். குமாரலிங்கம் அக்கம் பக்கம் பயத்துடன் பார்த்துவிட்டு மெல்லிய குரலில், “ஐயா! மெதுவாகப் பேசுங்கள் என் பெயரை உரத்துச் சொல்லாதீர்கள்!” என்று சொன்னான்.

“அப்பனே! ஏன் இப்படிப் பயப்படுகிறாய்? ஏன் உன் பெயரை உரத்துச் சொல்லக்கூடாது என்கிறாய்?” என்று கேட்ட மணியக்காரர் மறுகணம் பெருந்திகிலுடன் “விடுதலைக்குப் பிறகு இன்னும் ஏதாவது செய்து விட்டாயா, என்ன?” என்று பரபரப்புடன் கேட்டார்.

“விடுதலையா? என்ன விடுதலை?” என்று ஒன்றும் புரியாத திகைப்புடன் குமாரலிங்கம் கேட்டான்.

“என்ன விடுதலையா? உனக்குத் தெரியாதா, என்ன? பின் எப்படி இங்கே வந்தாய்?” என்று மணியக்காரர் கேட்டது குமாரலிங்கத்தின் மனக் குழப்பத்தை அதிகமாக்கிற்று.

“ஐயா! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே எனக்குத் தெரியவில்லையே? என்னை சென்னைச் சிறையிலிருந்து கண்ணனூர்ச் சிறைக்கு ரயிலில் கொண்டு போனபோது வழியில் தப்பித்து ஓடி வந்தேன். இதை விடுதலை என்று சொல்ல முடியுமா? விடுதலை எப்படி நான் அடைந்திருக்க முடியும்? பிரிவு கவுன்ஸில் அப்பீல் இன்னும் தாக்கல் கூட ஆ கவில்லையே? அப்படி அப்பீல் தாக்கல் ஆன போதிலும் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குக் கிடையாது. எந்தக் கோர்ட்டிலே எவ்வளவு தடவை அப்பீல் செய்தால்தான் என்ன பிரயோஜனம்? தலைவிதியை மாற்ற முடியுமா?” என்றான் குமாரலிங்கம்.

“தலை விதியாவது, ஒன்றாவது? அட அசட்டுப் பிள்ளை! இப்படி யாராவது செய்வார்களா? சர்க்காருக்கும் காங்கிரஸுக்கும் சமரசம் ஏற்பட்டு அரசியல் கைதிகள் எல்லாரையும் விடுதலை செய்துவிட்டார்களே! தேசமேல்லம ஒரே கொண்டாட்டமாயிருக்கிறதே! உனக்கு ஒன்றுமே தெரியாதா? ரயிலிலிருந்து நீ என்றைக்குத் தப்பித்துக் கொண்டாய்?” என்று பரபரப்புடன் பேசினார் மணியக்காரர்.

குமாரலிங்கத்தின் மனநிலை அச்சமயம் எப்படியிருந்தது என்று அவனாலேயே சொல்ல முடியாது. அதை நாம் எப்படிச் சொல்ல முடியும்? அதிசயமும் ஆனந்தமும் அவமானமும் அவநம்பிக்கையும் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு அவன் உள்ளத்தில் கொந்தளித்தன.

“ஐயா! தாங்கள் சொல்வதெல்லாம் உண்மைதானா அல்லது இந்த துரதிர்ஷ்டம் பிடித்தவனைத் தாங்களும் சேர்ந்து பரிகாசம் செய்கிறீர்களா?” என்று கேட்டான்.

மணியக்காரர் அவனுடைய கேள்விக்குத் தாமே பதில் சொல்வதற்குப் பதிலாகப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்திருந்த பத்திரிகைகளை எடுத்துக் காட்டினார்.

அந்தப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்த விவரங்கள் மணியக்காரர் சொன்ன விஷயங்களை எல்லாம் உறுதிப்படுத்தின.

அதாவது, காங்கிரஸுக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டதென்றும், அதன் காரணமாக அரசியல் கைதிகள் எல்லாரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஒரு பத்திரிகையில் இருந்தது. மறுநாள் பத்திரிகையில் இன்னின்ன கேஸைச் சேர்ந்தவர்கள் விடுதலையாவார்கள் என்று கொடுக்கப்பட்டிருந்த விவரமான ஜாபிதாவில் ‘தளவாய்ப் பட்டணம் கலகக் கேஸ் கைதிகள்’ என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதைப் பார்த்துவிட்டுக் குமாரலிங்கம் சிறிது நேரம் ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தான். ரயிலிலிருந்து தப்பியது முதல் அவனுடைய கால்நடைப் பிரயாணத்தின் போது கண்டு கேட்டு அநுபவித்த பல சம்பவங்களுக்கு இப்போது தான் அவனுக்குப் பொருள் விளங்கிற்று.

உதாரணமாக வழியில் பல இடங்களில் தேசீயக் கொடிகளைக் கம்பீரமாகப் பிடித்துக் கொண்டு, ‘வந்தேமாதரம்!’ ‘ஜய் ஹிந்த்!’ முதலிய கோஷங்களைப் போட்டுக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் ஊர்வலம் வந்த காட்சிகளை அவன் தூரத்திலிருந்து பார்த்தான். அம்மாதிரிக் காட்சிகளைப் பார்க்க நேர்ந்தபோதெல்லாம் ‘ஏது? இவ்வளவு அடக்கு முறைக்குப் பிறகும் நாட்டில் சுதந்திர இயக்கம் பலமாக நடக்கிறதே! இந்தியா தேசத்துக்குக்கூட விடுதலை உண்டு போலிருக்கிறதே!’ என்று அவன் எண்ணினான். உண்மையில் அந்த ஆர்ப்பட்டங்களுக்கெல்லாம் காரணம் என்னவென்பது இப்போதுதான் அவனுக்கு மிகவும் நன்றாய்த் தெரிந்தது.

இன்னும் பல இடங்களில் போலீஸாரைக் கண்டு அவன் அவசரமாக மறைந்து ஒளிந்து கொள்ளப் பிரயத்தனப் பட்டான். ஆயினும் அவன் பேரில் அவர்கள் சந்தேகப்படவும் இல்லை; பிடிக்க முயலவும் இல்லை.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அவன் மிகவும் களைத்துப் போய்ச் சாலை ஓரத்துச் சாவடி ஒன்றின் தாழ்வாரத் தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். திடீரென்று இரண்டு போலீஸ்காரர்கள் சமீபத்தில் வருவதைப் பார்த்துவிட்டு, சட்டென்று திரும்பிப் படுத்துக் கொண்டு தூங்குவதுபோல் அவன் பாசாங்கு செய்தான்.

போலீஸ் ஜவான்கள் இருவரும் அவன் அருகில் நெருங்கியதும் அவர்களில் ஒருவன், “இவனைப் பார்த்தாயா? குமாரலிங்கத்தின் சாயலாகத் தோன்றுகிறதல்லவா?” என்றான். அதற்கு இன்னொருவன், “குமாரலிங்கம் இங்கே எதற்காக வந்து திக்கற்ற அநாதையைப் போல் சாவடியில் படுத்திருக்கிறான்? மேளமும் தாளமும் தடபுடல் படாதா இத்தனை நேரம் அவனுக்கு?” என்றான்.

இவர்களுடைய பேச்சு குமாரலிங்கத்துக்கு ஒரு மர்மப் புதிராயிருந்தது. வேறு எந்தக் குமாரலிங்கத்தைப் பற்றியோ பேசுகிறார்கள் என்று எண்ணினான். தன்னைப் பற்றித்தான் அவர்கள் பேசியிருக்க வேண்டும் என்று இப்போது உறுதிப்பட்டது.

“ஐயா! இந்தச் செய்தி ஒன்றும் எனக்கு உண்மையில் தெரியாதுதான்? சாவதற்கு முன்னால் சோலைமலைக்கு எப்படியாவது ஒரு தடவை வரவேண்டும்; தங்களையும் தங்கள் குமாரியையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் ரயிலிலிருந்து தப்பித்து வந்தேன். போலீஸார் என்னுடைய சொந்த ஊரிலே கொண்டு போய் என்னை விட்டு விடுதலைச் செய்தியைச் சொல்ல எண்ணியிருந்தார்கள் போலிருக்கிறது. இந்த ஒரு வாரமும் நான் பட்ட கஷ்டங்களுக்கு அளவேயில்லை. அவ்வளவும் வீண் என்று இப்போது தெரிகிறது. என்னைப் போல் மூடன் வேறு யாரும் இருக்கமுடியாது!” என்றான் குமாரலிங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *