Covid-19Tirupati NewsYoutube

Tirumala Tirupati Darshan Devasthanams Covid News | Special Darshan | Free Darshan | Accommodation

Tirumala Tirupati Darshan Devasthanams Covid News | Special Darshan | Free Darshan | Accommodation

Tirumala Tirupati Darshan Devasthanams Covid News | Special Darshan | Free Darshan | Accommodation

உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் திருமலையில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரி வெங்கடேஸ்வரா திருக்கோயிலில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 20ஆம் தேதி திருப்பதி கோயிலின் கதவுகள் மூடப்பட்டன. அதன்பிறகு ஐந்து நாட்கள் கழித்து மார்ச் 25ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.

128 ஆண்டுகால சோகம்:

திருமலையில் உள்ள ஸ்ரி வெங்கடாஜலபதி சுமார் 2,000 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டதாக தேவஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் கடந்த 128 ஆண்டுகளில் முதல்முறை கடந்த ஆண்டு திருப்பதி கோயிலில் தரிசனம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக 1892ஆம் ஆண்டு திருப்பதி கோயில் முழுவதுமாக மூடப்பட்டு அனைத்துவித சடங்குகளும் நிறுத்தப்பட்டன. ஆனால் இதற்கான காரணம் குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ஜூன் முதல் மீண்டும் தரிசனம்:

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த ஆண்டு ஜூன் 11ஆம் தேதி பக்தர்கள் தரிசனத்திற்காக திருப்பதி கோயில் நடை திறக்கப்பட்டது. அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்பிறகு பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தது. தொடக்கத்தில் தினசரி 3,000 முதல் 5,000 பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:

முகக்கவசங்கள் அணிந்து, போதிய சரீர இடைவெளியுடன், சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டு உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவுகளை அவ்வப்போது தேவஸ்தான நிர்வாகம் முறையாக கடைபிடித்து வருகிறது. படிப்படியாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, தற்போது நாளொன்றுக்கு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தான நிர்வாகம் கடந்த மாதம் அனுமதி அளித்தது. இவற்றின் மூலம் பொருளாதார நெருக்கடியில் இருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோவிட் 19 இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது திருப்பதியையும் விட்டு வைக்கவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவஸ்தானத்தில் தர்மகிரி வேத பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்கள் என மொத்தம் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டிய கட்டாயத்தில் தேவஸ்தான நிர்வாகம் இருக்கிறது.

மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி முகாம்கள் திருப்பதி, திருமலையிலும் கடந்த 5ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. முன்களப் பணியாளர்களாக இருக்கும் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை ஆயிரம் பேருக்கு போடப்பட்டு எந்தவித பக்க விளைவுகளும் இன்றி காணப்படுகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பலரது பாராட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் பெற்றுள்ளது.

கடந்த ஜூன் மாத தளர்வுகளுக்கு பிறகு பக்தர்கள் யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படாமல் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலாகி கிட்டதட்ட ஓராண்டு ஆன நிலையில் திருப்பதி கோயிலில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. பொருளாதார ரீதியாகவும் மீண்டு வர முடியாமல் தவிப்பதாக சொல்லப்படுகிறது. இது தேவஸ்தான நிர்வாகத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *