Tamil AudiobooksYoutube

Kadal Pura Audiobook Part1 Ch8

கடல் புறா Kadal Pura Part1 Ch8 Audiobook | Kadal Pura Audio Book | Sandilyan | Mr and Mrs Tamilan

கடல் புறா Kadal Pura Audiobook Part1 Ch8 | Kadal Pura Audio Book | Sandilyan | Mr and Mrs Tamilan

கடல் புறா Kadal Pura Audiobook Part1 Ch8 | Kadal Pura Audio Book | Sandilyan | Mr and Mrs Tamilan

அந்த இரவில்‌, அறை ஜாமத்திற்கு முன்பு, எந்த முன்னறிவிப்புமின்றிச்‌ சாளரத்தின்‌ மூலம்‌ திடீரென வந்து குதித்துத்‌ திரை மறைவில்‌ பதுங்கிய இளையபல்லவன்‌, சில நாழிகைக்குள்ளாகவே தன்னுடன்‌ நீண்ட நாள்‌ பழக்க முள்ளவன்‌ போல்‌ நடந்துகொள்ளத்‌ துவங்கிவிட்டதையும்‌ படுக்கச்‌ செல்லும்‌ அந்த நேரத்திலும்‌ இடக்கு வார்த்தைகள்‌ பேச முற்பட்டதையும்‌ கண்ட காஞ்சனாதேவிக்கு, அவன்‌ மீது எல்லையற்ற கோபம்‌ சுடர்விடுவதே இயற்கையென்‌றாலும்‌ அந்த இயற்கைக்கு இதயம்‌ இடம்‌ கொடாமல்‌, உள்ளம்‌ பூராவும்‌ மகிழ்ச்சி வெள்ளம்‌ பாயவே, அவள்‌ அறை நாதாங்கியைப்‌ பிடித்த வண்ணம்‌ இடை சிறிது நெளிய மிக ஒய்யாரமாக நின்றாள்‌.

தவிர, இளைய பல்லவன்‌, அவன்‌ கையிலிருந்த காட்டுப்‌ புறாவையும்‌ நோக்கித்‌ தன்னையும்‌ நோக்குவதைக்‌ கண்டதும்‌ சிறிது புன்முறுவலும்‌ கோட்டினாள்‌ கடாரத்தின்‌ இளவரசி. இளைய பல்லவன்‌ அவள்‌ நின்ற அழகையும்‌, உள்ளே ஓடிய எண்‌ணங்களின்‌ விளைவாக அவள்‌ உதடுகளில்‌ தோன்றிய புன்னகையையும்‌ கவனித்ததன்றி, அவள்‌ கழுத்தில்‌ வளைய வந்து மார்பில்‌ தொங்கிய நவரத்தின மாலையையும்‌ பார்த்து அவள்‌ புன்னகையின்‌ ஒளிக்கு முன்பு அந்த நவரத்தின மாலையின்‌ ஒளி எத்தனை சர்வ சாதாரணமானது என்பதை நினைத்து வியந்தான்‌.

எத்தனையோ பளபளப்பான கற்களை உலகத்தில்‌ ஆண்டவன்‌ சிருஷ்டித்‌திருந்தும்‌, அவற்றுக்குப்‌ பின்பு தொக்கி நிற்க உணர்ச்சியாகிற ஒளியை மட்டும்‌ சிருஷ்டிக்காத காரணத்தினாலேயே ஒரு பெண்ணின்‌ இளநகை முன்பு இரத்தினவைடூரியங்களும்‌ ஒளியிழந்து விடுகின்றன என்பதை எண்ணி ஆச்சரியத்தில்‌ அழ்ந்தான்‌.

காஞ்சனா தேவியின்‌ கண்களும்‌ உதடுகளும்‌, உணர்ச்சிகளின்‌ விளைவாகப்‌ பேசும்‌ பேச்சுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல்‌ நவரத்தின மாலையின்‌ வைடூரியங்கள்‌ எத்தனை மவுனத்தையும்‌, சங்கடத்தையும்‌ அடைந்திருக்கின்றன என்பதையும்‌ இளையபல்லவன்‌ அலசிப்‌ பார்த்து, விளக்கில்‌ இவைபளிச்சுப்‌ பளிச்சென்று மின்னுவதற்கும்‌ அந்தச்‌ சங்கடம்‌தான்‌ காரணமாயிருக்க வேண்டும்‌ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்‌.

செயற்கைக்‌ கற்கள்‌ சிறிதளவும்‌ ஈடுகொடுக்க முடியாத இயற்கை லாவண்யங்களுடன்‌ திகழ்ந்த காஞ்சனாதேவிக்கு ஆபரணங்கள்‌ அனாவசியம்‌ என்றே முடிவுக்கு வந்த கருணாகர பல்லவன்‌, சொர்ணச்‌ சாயையுடனும்‌ பட்டு போல்‌ மென்மையுடனும்‌ விளங்கிய அவள்‌ கழுத்தையும்‌, கன்னங்களையும்‌ ஒருமுறை தடவிப்‌ பார்த்துத்‌தன்‌ இடது கையிலிருந்த வெண்புறாவின்‌ முதுகை மெல்லத்‌ தடவிக்‌ கொடுத்தான்‌.

அவன்‌ கண்கள்‌ பாய்ந்த இடங்களைக்‌ கவனித்த காஞ்சனாதேவி அவன்‌ புறாவின்‌ முதுகைத்‌ தடவியதும்‌ தன்‌ கபோலங்களையே அவன்‌ வருடிவிட்டது போல்‌ பெரிதும்‌ சங்கடத்துக்குள்ளாகி, தலையைச்‌ சரேலென்று மறுபுறம்‌ திருப்பிக்‌ கொண்டாள்‌. அப்படித்‌ திருப்பியதால்‌ தன்‌ பார்வைக்கு நேரெதிரில்‌ வந்துவிட்ட அவள்‌ வலது கன்னத்தில்‌ வெட்கத்தின்‌ குருதி பாய்ந்து அதைச்‌ செக்கச்‌செவேலென்று அடித்துவிட்டதைக்‌ கண்ட இளையபல்லவனும்‌, தான்‌ வரம்பு மீறிவிட்டதை உணர்ந்து, பேச்சினால்‌ உணர்ச்சிகளுக்குத்‌ தளைபோட முற்பட்டு, “காஞ்சனா தேவி!” என்று ஒருமுறை அழைத்தான்‌.

அவளிடமிருந்து ஒரு ஹும்‌காரந்தான்‌ பதிலாக வந்தது.

“நான்‌… ” சிறிது தடுமாறியே பேசினான்‌ அந்த வீரன்‌.

“ஹூம்‌” அப்பொழுதும்‌ அதே சத்தம்தான்‌ வந்தது அவளிடமிருந்தது. அந்தச்‌ சத்தத்தில்‌ சங்கடத்துடன்‌ ஓரளவு கடுமையும்‌ கலந்திருந்தது.

“விளையாட்டாகப்‌ பேசிவிட்டேன்‌” என்று மறுபடியும்‌ பேச்சைத்‌ துவங்கு, முடிக்க முடியாமல்‌ திணறினான்‌ இளையபல்லவன்‌.

“ஹூம்‌!”

“மன்னிப்புக்‌ கேட்கிறேன்‌. ”

“ஹும்‌! ஹூம்‌. ”

“இந்த ஹும்முக்கு மேல்‌ வார்த்தைகளே வராதா உங்களுக்கு? ” இம்முறை இளையபல்லவன்‌ சொற்களில்‌ சிறிது தைரியமும்‌ தொனித்தது.

சரேலெனத்‌ திரும்பிய காஞ்சனாதேவியின்‌ கண்களில்‌ மிகுந்த கம்பீரமும்‌ மிதமிஞ்சிய கடுமையும்‌ கலந்திருந்தன. உரிமையற்ற ஆடவன்‌ அதிக உரிமை கொண்டாட முயலும்போது கற்புக்கரசிகளின்‌ இதயத்தில்‌ ஏற்படும்‌ உக்கிரம்‌ அந்தக்‌ கண்களில்‌ இருந்தது. “வார்த்தைகள்‌ வரும்‌ இளைய பல்லவரே ! நிரம்ப வரும்‌, வரம்புக்குள்‌ சம்பாஷணையும்‌ செய்கையும்‌ இருக்கும்‌ பட்சத்தில்‌” என்ற அவள்‌ சொற்களிலும்‌ அந்தக்‌ கடுமை நன்றாகப்‌ புலனாயிற்று. இப்படிப்‌ பேசிய அந்த அழகி, அதுவரையிருந்த சங்கடத்‌தையும்‌ சலனத்தையும்‌ உதறிக்கொண்டு நெளிந்த நிலையிலேயே சிறிது நிமிர்ந்து கம்பீரத்துடன்‌ நின்றாள்‌.

ஆளும்‌ தோரணையில்‌ நின்ற அந்த ஆரணங்கைக்‌ கவனித்த இளையபல்லவனின்‌ விழிகள்‌, அவள்‌ விழிகளிலிருந்து தப்பவே முயன்றன. பத்து வாள்கள்‌ வீசப்பட்டாலும்‌ அவற்றை உறுதியுடன்‌ நோக்கவல்ல அவன்‌ கண்கள்‌ அந்தப்‌ பெண்ணின்‌ பார்வைக்கு முன்னால்‌ உறுதி குலைந்து நிலை தடுமாறின. அவன்‌ பேசிய சொற்களும்‌ அப்படி உறுதி குலைந்து தழுதழுத்தே வெளிவந்தன. “புரிகிறது அரசகுமாரி! தவறு புரிகிறது!” என்ற சொற்‌களைத்‌ தட்டுத்‌ தடுமாறியே உதிர்த்தான்‌ இளையபல்லவன்‌.

சில வினாடிகள்‌ முன்பு தன்னை அலசிய கண்கள்‌ நிலைகுலைந்து, பெண்களின்‌ கண்களைப்போல்‌ நிலத்தை நோக்குவதைக்‌ கண்டாள்‌ கடாரத்துக்‌ கட்டழகி. புறாவைப்‌ பிடித்திருந்த இடது கையும்‌ அதன்‌ முதுகைத்‌ தடவிய வலது கையும்‌ சற்றே நடுங்குவதையும்‌ பார்த்த அந்தப்‌ பேரழகியின்‌ முகத்திலிருந்த கோபம்‌ மெல்ல மெல்ல அகன்றது. “இவர்‌ மிகுந்த பண்பாடுள்ளவர்‌. அதனால்தான்‌ தவறை உணர்ந்ததும்‌ நடுங்குகறார்‌. பாவம்‌! எதற்காக இத்தனைக்‌ கடுமையை இவரிடம்‌ காட்டினேன்‌!” என்று தனக்குள்‌ எண்ணமிட்டாள்‌ காஞ்சனாதேவி. அத்துடன்‌, “ஆண்களின்‌ சலனத்துக்குப்‌ பாதி பெண்கள்தானே காரணம்‌? பெண்கள்‌ கொடுக்கும்‌ இடத்தால்தானே அண்கள்‌ வரம்பு மீறுகறார்கள்‌? இவர்‌ திரை மறைவிலிருக்கறேனென்று சொன்னதும்‌ நான்‌ நகைத்தது மட்டும்‌ சரியா? பெண்மைக்கு அழகா? ” என்று தன்னையும்‌ கண்டித்துக்‌ கொண்ட காஞ்சனாதேவி, பேச்சை வேறு இசையில்‌ மாற்றி, “இரண்டாம்‌ ஜாமம்‌ துவங்கிவிட்டது இளைய பல்லவரே!” என்றாள்‌.

“ஆம்‌, அரசகுமாரி! ஊரும்‌ மெல்ல மெல்ல அடங்கி வருகிறது. கப்பல்‌ துறையிலும்‌ கூச்சல்‌ அதிகமாகக்‌ காணோம்‌. வீதியிலும்‌ ஜனநடமாட்டம்‌ குறைந்துவிட்டது”என்று சம்பாஷணையில்‌ கலந்துகொண்டான்‌ கருணாகர பல்லவன்‌, சிறிது தைரியத்தை வரவழைத்துக்‌ கொண்டு.

“வீதியில்‌ மட்டுமல்ல, வீட்டிலும்‌ சத்தத்தைக்‌ காணோரம்‌. ”

“ஆமாம்‌, உறங்கும்‌ நேரம்‌ வந்துவிட்டது! உங்கள்‌ பணிப்பெண்கள்‌ காத்திருப்பார்கள்‌, செல்லுங்கள்‌. ”

“நீங்களும்‌ உறங்குங்கள்‌. அதோ மஞ்சமிருக்கிறது. விடிவிளக்கும்‌ அறை மூலையிலிருக்கிறது. வேறெதாவது தேவையானால்‌ சொல்லுங்கள்‌” என்று கேட்டாள்‌ காஞ்சனா தேவி.

“வேறெதுவும்‌ தேவையில்லை, அரசகுமாரி மஞ்சம்‌ கூடத்‌ தேவையில்லை. என்னால்‌ தரையிலும்‌ படுத்து உறங்க முடியும்‌. ஆனால்‌ இன்றிரவு உறக்கம்‌ பிடிப்பது கஷ்டம்‌” என்று பதில்‌ கூறினான்‌ கருணாகர பல்லவன்‌.

kadal pura,kadal pura audiobook,kadal pura novel in tamil,kadal pura part 3,kadal pura part 1,kadal pura part 2,kadal pura story,kadal pura novel,kadal pura audiobook free,kadal pura audio,kadal pura audiobook free download,

kadal pura audiobook part 1,kadal pura audiobook part 2,kadal pura audiobook part 3,sandilyan kadal pura story ,kadal pura sandilyan novel,sandilyan audiobooks,கடல் புறா,kadal pura audio book,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *