NewsYoutube

Secret of Kolli Hills கொல்லிமலை ரகசியம் Mr and Mrs Tamilan

Secret of Kolli Hills | கொல்லிமலை ரகசியம் Mr and Mrs Tamilan

Secret of Kolli Hills | கொல்லிமலை ரகசியம் Mr and Mrs Tamilan

Secret of Kolli Hills | கொல்லிமலை ரகசியம் Mr and Mrs Tamilan

கொல்லிமலையை அரசாண்ட அப்போதைய மன்னன் ஓரி மீது பெருஞ்சேரல் இரும்பொறை போரிட்டு வென்றான். அதை கொஞ்சம் எனது கற்பனை சேர்த்து எழுதிருக்கிறேன், மேற்கண்ட செய்தி உண்மை ஆனால் இக்கதையில் வரும் சம்பவங்கள் முழுக்க எனது கற்பனையே இக்கதை தொடர்பாக உதவிய கூகிள்க்கும் அதில் கொல்லி மலை தொடர்பான விவரங்களை பதிவேற்றிருந்த நண்பர்களுக்கும் நன்றி)

அன்று கிபி 2௦௦ கொல்லிமலை :

டம் டம் டப், டம் டம் டப் – அதிர்ந்து கொண்டிருந்தது முரசு. எங்கும் கொல்லு, குத்து, வெட்டு, கூச்சல்கள், வாள்கள் ஒன்றுடன் ஓன்று உராயும் சத்தங்கள் அதனால் சதை கிழிந்து ஐயோ, அம்மா, ஆ.. மரண ஓலங்கள்..
போர்…
பெரும் போர்…

பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் கொல்லி மலை அரசன் ஓரிக்கும். இருபடைகளும் உக்கிரமாக மோதிக்கொண்டது..
இரும்பொறை படையில் தொடர்ந்து பெருத்த இழப்புகள். ஓரியின் படைகள் மந்திர படைகள் போன்று செயல்பட்டது. அந்த அடர்ந்த கானகத்தில் ஓரிப்படை வீரர்கள் எங்கிருந்து தாக்குகிறார்கள் என்றே தெரியாத திகைப்பு.. எதோ ஒரு அடர்ந்த மரத்தில் பின்புறத்தில் இருந்து திடிரென தோன்றி நாசம் விளைவித்து விட்டு வந்த வேகத்திலே மறைந்து போனார்கள்.

போதாத குறைக்கு மலை மீதிருந்து புயல் வேகத்தில் வந்து தாக்கும் அம்புகள், மலை மீதிருந்து தரை நோக்கி எய்யப்படும் அம்புகள் பலம் பொருந்தியவை. நானிலிருந்து விடுபட்டு இரும்பொறை படைகளை நிர்முலம் செய்துகொண்டிருந்தன ஆ அதோ அம்பு என கூறி கூறிமுடிக்கும் முன் அவ்வீரனை அம்பு தாக்கி இருந்தது அத்தனை பலம் பொருந்தியதாக அம்புகளின் வேகம் இருந்தது…

வல்வில் ஓரி வீரர்கள் என்றால் சாதரணமா..? ஒரே அம்பில் சிங்கம், கரடி, காட்டுபன்றியை கொன்றவனாயுற்றே ஓரி மன்னன் அதனால் தானே அவனுக்கு “வல்வில் ஓரி” சிறப்பு பேர் வந்தது, அப்படிபட்ட மன்னனின் வீரர்களின் அம்பு விடும் திறன் பற்றி சொல்லவா வேண்டும்.??
அக்கொல்லி மலை வீரர்கள் விடும் அம்புக்கு கொஞ்சம் கொஞ்சமாக இரும்பொறை படை இழப்பை சந்தித்துக்கொண்டிருந்தது போதாத குறைக்கு மறைந்திருந்து தாக்கும் வீரர்கள் வேறு.
இரவு..
கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி..
இரும்பொறை படைவீடு..
கூடாரத்தின் வெளியே அங்கங்கே தீவட்டிகள் எரிந்து கொண்டிருக்க கூடாரத்தின் நான்கு பாகமும் காவலர்களால் சூழப்பட்டு கிடந்தது சற்று தொலைவில் வீரர்களின் கூடாரங்கள் வெட்டுப்பட்டு, உடலுறுப்பு இழந்து காயமுற்று கிடந்த வீரர்களின் வலி மிகுந்த முனகல்கள் அந்த இரவின் நிசப்தத்தை குலைத்துக்கொண்டிருந்தது. கூடாரத்தில் குறுக்கும் நெடுக்குமாய் ஆவேசமாக நடந்து கொண்டிருந்தான் இரும்பொறை. மன்னனின் கோபம் கண்டு நடுங்கி போய்க்கிடந்தார்கள் படைதளபதிகள்..

எப்படி.. எப்படி சாத்தியமிது? நம்மிடம் அதிக வீரர்கள் இருந்தும் எண்ணிகையில் குறைவான எதிரிப்படை வீரர்களை ஏன் இன்னும் வெல்ல முடியவில்லை ஏன் நம்மிடம் இவ்வளவு நாசம்.? கேவலம் ஒரு குறுநில அரசனிடமா நாம் இழப்புகளை சந்திப்பது.? ம்ம்ம்ம்…. யாரேனும் வாய்திறந்து நாவசையுங்கள்.

மன்னனா சரியான பாதைகள் இல்லாததால் நமது குதிரைப்படை முன்னேருவதில் தாமதமும், காடுகளில் மலைப்பாங்கான இடங்களில் போரிட்டு பழக்கம் இல்லாத வீரர்களுமே காரணம்.
மேலும், ஓரி படையின் வீரர்களின் மறைந்திருந்து தாக்கும் உத்தியும், அவர்களின் வில் படையின் இலக்கு தவறாத குறியும் தான் காரணம்..

சீ… எதிரி படையின் புகழ் பாடவா நான் உங்களை அழைத்தேன் ம்ம்ம்…
இரும்பொறை உறுமினான்..
தலைநகரில் இருந்து இன்னும் அதிக படைகளை தருவியுங்கள் ஒற்றர்களை மலை முழுக்க அனுப்பி தகவலை சேகரியுங்கள் அகப்படும் எதிரி படை வீரர்களை கண்டந்துண்டமாக வெட்டி எறியுங்கள் அகப்படும் எவரையும் விட வேண்டாம் ம்ம்ம்ம்.. சொல்லிவிட்டு சரேலென தனது கூடாரம் நோக்கி நடந்தான் இரும்பொறை..

கொல்லிமலை ரகசியங்கள்,கொல்லிமலை சித்தர்கள்,kollimalai hills,kollimalai ragasiyam,kollimalai falls,kollimalai tourist places,kollimalai story in tamil,kollimalai story,kolli hills falls,kolli hills tamil,

கொல்லிமலை ரகசியம்,Secret of Kolli Hills,kollimalai ragasiyam in tamil,kollimalai ragasiyam book,kollimalai ragasiyam video,kollimalai siddhar ragasiyam ,kolli paavai in tamil,kolli paavai,secrets of kollimalai ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *